ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2024 (16:31 IST)

ஓடும் ரயிலில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞரை அடித்தே கொலை செய்த பயணிகள்..!

Murder
ஓடும் ரயிலில் பதினோரு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் அந்த ரயிலில் பிரசாந்த் குமார் என்பவர் பயணம் செய்தார்.  சாதாரண டிக்கெட் எடுத்து முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறிய அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவில் திடீரென அவர் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

அந்த சிறுமி அலறியதால் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் பிரசாந்தை சரமாரியாக தாக்கினர். அதன்பின்னர் ரயில் கான்பூர் வந்தபோது அங்கிருந்த காவல்துறையினர்களிடம் பிரசாந்தை ஒப்படைத்து விட்டு அதே ரயிலில் சிறுமியும் அவருடைய பெற்றோர்களும் சென்று விட்டனர்.

இந்த நிலையில் பயணிகள் அடித்ததால் படுகாயம் அடைந்த பிரசாந்த், காவல் நிலையத்தில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்படவே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறினர். இதனை அடுத்து போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Mahendran