வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (12:16 IST)

சாலையில் வீலிங் செய்து அச்சம் ஏற்படுத்திய இளைஞர்.. பொதுமக்கள் செய்த தரமான செயல்..!

பெங்களூர் சாலையில் வீலிங் செய்து பைக் ஓட்டி பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞரை பொதுமக்கள் தரமான செயல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் நெடுஞ்சாலையில் இன்று காலை திடீரென இளைஞர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த நிலையில் வீலிங் செய்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பயமுறுத்தினார்.

இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆத்திரமடைந்து இளைஞரின் பைக்கை அப்படியே தூக்கி பாலத்தில் இருந்து கீழே போட்டனர். 30 அடி உயரத்திலிருந்து பைக்கை கீழே போட்டதில் பைக் சுக்கு நூறாக நொறுங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் பொதுமக்களிடம் ஏதும் பேச முடியாமல் இருந்த நிலையில் இது குறித்த புகைப்படங்களை பொதுமக்கள் இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றன.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரிடம் விசாரணை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva