திங்கள், 27 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated: ஞாயிறு, 19 மார்ச் 2023 (15:40 IST)

சகோதரியை தெரியாமல் மணந்த இளைஞர்.. 6 ஆண்டுகளுக்கு பின் உண்மை தெரிந்து அதிர்ச்சி..!

இளைஞர் ஒருவர் சகோதரியை தெரியாமல் திருமணம் செய்த நிலையில் ஆறு ஆண்டுகளுக்கு பின்னால் இந்த உண்மை தெரிய வந்ததை அடுத்து கடும் வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் இளைஞர் ஒருவருக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்த நிலையில் இருவரும் சந்தோஷமாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் ஆகி 6 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மனைவி தனது உடன் பிறந்த சகோதரி என்று அறிந்ததை அடுத்து அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார். 
 
பிறந்தவுடன் அந்த பெண் குழந்தை தத்து கொடுக்கப்பட்டதாகவும் பெற்றோர் யார் என தெரியாமலேயே அந்த பெண் வாழ்ந்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் மனைவிக்கு உடல்நல குறைவு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மனைவிக்கு கிட்னி தானம் செய்ய பரிசோதனை மேற்பட்டது
 
அப்போதுதான் இருவரும் அண்ணன் தங்கை என்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பெரிய பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva