செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 8 ஜனவரி 2017 (18:03 IST)

பொது இடத்தில் பெண்களை முத்தமிட்டு சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட வாலிபர்

டெல்லியில் பொது இடத்தில் பெண்களை முத்தமிட்டு சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.


 

 
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்கள் எதிரான வன்கொடுமை அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் பெண்கள் மெட்ரோ ரெயிலில் கத்தி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியுள்ளனர். 
 
இந்நிலையில் டெல்லியில் கண்ணோட் பிளேஸ் பகுதியில் வாலிபர் ஒருவர் சாலையில் இளம்பெண்களை முத்தமிட்டு தப்பி ஓடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து தகவல் அறித்த டெல்லி காவல்துறையினர் அந்த வாலிபரை வலைவீசி தேடிவருகின்றனர்.