திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 1 ஆகஸ்ட் 2020 (19:31 IST)

உங்கள் செயல் அற்புதமானது ... ரியல் ஹீரோவை பாரட்டிய முன்னணி நடிகை

சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தமாணவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டினாலும் பாலிட் நடிகர் சோனு சூட் தனது 
சொந்த முயற்சியால் தனிவிமானத்தில் கிர்கிஸ்தானில் இருந்து அவர்களை வரவழைக்கவும்வேறு மாநிலங்களில் இருந்த புலம்பெயர் தொழிலார்கள் சொந்த ஊருக்குச் செல்லவும் பெரிதும் உதவி மக்கள்மனதில் இடம் பிடித்தார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் விவசாயி நாகேஸ்வரராவ், ஒருவர் மாடுகளுக்கு பதில் தனது இரு வெண்ணிலா, சந்தனா என்ற இரு மகள்களைக் கொண்டு நிலத்தில் உழுத வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதைப் பார்த்த சோனு சூட் அந்த விவசாயிக்கு டிராக்டர் வழங்கினார்.

அதாவது ஒரு மணிக்கு டிராக்டரில் நிலத்தை உழ ரூ.1500 ஆகும் எனவே பண வசதி இல்லாததால் மகள்களை வைத்து நிலத்தை உழ நாகேஸ்வரராவ் முடிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ ஞாயிற்றுக் கிழமை வைரல் ஆனதை அடுத்து இதைப் பார்த்த சோனு சீட் இன்று மாலையில் உங்கள் நிலத்தில் டிராக்டர் நிலத்தை உழும். நீங்கள் இருவரும் படிக்க வேண்டும் என சிறுமிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில் காய்கறி விற்று வந்த ஒரு சாஃப்ட்வேர் இன்ஞ்சினியர் ஒருவருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். அதாவது அந்தப் பெண் கொரொனாவால் வேலை இழந்துள்ளதைக் கேள்விப்பட்டு சோனுசூட் அவருக்கு இந்த வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

அத்துடன் இவர் புலம் பெயர் தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இந்நிலையில் பாலிவுட் நாயகி பிரியங்கா சோப்ரா நீங்கள் செய்யுமுதவிகள் அற்புதமானவை என மனதார சோனுசூட்டைப் பாராட்டிப் புகழந்துள்ளார்.