1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (11:32 IST)

நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்கள்....

பெங்காலி பட நடிகை காஞ்சனா மொயித்ராவை, குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

 
நடிகை காஞ்சனா மொயித்ரா கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு, படப்பிடிப்பை முடித்து தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஸ்ரீடி கிராசிங் என்ற இடம் அருகே அவர் வந்த போது, குடி போதையில் இருந்த மூன்று வாலிபர்கள் அவரது காரை வழிமறித்துள்ளனர்.
 
அதன் பின் காரில் இருந்த சாவியை ஒருவன் பிடிங்கிக்கொண்டதோடு, காருக்கு வெளியே அவரை இழுத்து, அவரது உடலில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடமிருந்து எப்படியோ தப்பிய நடிகை, பெலாலா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 


 

 
அதன் அடிப்படையில் சங்கர் டவுலி (25), சூரஜித் பாண்டே (25) என்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய ஒருவனையும் போலீசார் தேடி வருகின்றனர்.