ஓடும் ரயிலின் கழிவறையில் தமிழக இளைஞர் தீக்குளித்து தற்கொலை
ஓடும் ரயிலின் கழிவறையில் தமிழக இளைஞர் தீக்குளித்து தற்கொலை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மும்பை புறப்பட்ட ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மும்பை செல்லும் நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வழக்கம் போல புறப்பட்டது. ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜினுக்கு பின்னால் உள்ள பொது பெட்டி ஒன்றில் பயணம் செய்த ஒரு வாலிபர் கழிவறைக்குள் சென்று தனது உடையில் தீவைத்து கொண்டார்.
கழிவறையில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்ட மற்ற பயணிகள் பதற்றத்துடன் கதவை உடைத்தனர். கழிப்பறையில் இருந்த நபரை வெளியே இழுத்து அவர் மீது இருந்த தீயை அணைத்தனர். அப்போது காயம்குளம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. ரயில்வே ஊழியர்கள் அந்த பெட்டியை மற்ற பெட்டிகளில் இருந்து தனியாக கழற்றி தீ பரவாமல் தடுத்தனர்.
மேலும், பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு புகைந்து கொண்டிருந்த தீயை அணைத்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அந்த இளைஞர் நவாஸ் (24) என்பதும் அவர், வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. உடலில் பலத்த தீக்காயம் அடைந்த நவாஸை போலீஸார் ஆலப்புழை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்