பக்கத்து வீட்டு நாயை சமைத்து சாப்பிட்ட வாலிபர் - கேரளாவில் அதிர்ச்சி
ஒரு நபர் ஆசையாக வளர்த்த நாயை, கொன்று அதை சமைத்து சாப்பிட்ட வாலிபரை போலீசார் கைது செய்த விவகாரம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசிப்பவர் ஹரிகுமார். இவர், விலை உயர்ந்த ஒன்றரை வயதுடைய டாபர்மேன் நாயை வளர்த்து வந்தார். அந்த நாய் இரு தினங்களாக காணவில்லை. எனவே, ஹரிகுமார் அதை தேடி வந்தார்.
இந்நிலையில், ஹரிகுமாரின் வீட்டிற்கு அருகே கட்டிட வேலை செய்து வந்த விக்ரம்(24) என்ற வாலிபர் அந்த நாயை திருடிச் சென்று, அதைக் கொன்று சமைத்து சாப்பிட்டுள்ளார். இதுபற்றி, விக்ரமுடன் வேலை செய்யும் மற்றொரு தொழிலாளிக்கு தெரிய வந்தது. எனவே, அவர் விக்ரமை பிடித்து, ஹரிகுமாரிடம் ஒப்படைக்க முயன்றார்.
அப்போது ஏற்பட்ட தகராறில், விக்ரம் அவரை கத்தியால் குத்தியுள்ளார். எனவே, இதுபற்றி ஹரிகுமாருக்கும் அவர் தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் கேள்விபட்டு அங்கு வந்த போலீசார் விக்ரமை கைது செய்து விசாரித்தனர்.
அப்போது, விக்ரம் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. எனவே, சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.