வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abi
Last Modified: திங்கள், 2 மே 2016 (21:38 IST)

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய தொலை நோக்கி?

சீனாவில் உள்ள ஹவாய் நகரில் அமைக்க இருந்த உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி, தற்போது இந்தியாவின் லடாக்கில் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


 

 
2015ஆம் ஆண்டு சீனாவில் கட்டமைக்க இருந்த முப்பது மீட்டர் தொலைநோக்கி  திட்டத்திற்கு, ஹவாய் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஏனெனில், இந்த திட்டத்திற்காக, ஏராளமான குடியிருப்புகளை காலி செய்ய நிர்பந்தித்தால் மக்கள் போராட்டங்களில் குதித்தனர். 
 
இதைத்தொடர்ந்து, தொலைநோக்கி அமைக்கும் திட்டம் தற்போது இந்தியாவில் செயல்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் இந்தியா உள்பட சீனா, ஜப்பான், கெனடா, அமெரிக்கா போன்ற நாடுகளின் கூட்டு முயற்சில் உருவாகும் திட்டமாகும்.
 
மேலும், தொலைநோக்கி கட்டமைக்க ஏற்படும் பிரச்சனைகளில், சீனாவில் ஏற்பட்டது முதல் முறையல்ல என்றும், இந்தியா இத்திட்டத்தில் 10% பங்குதாரர் என்பதால், லடாக்கில் அமைக்கப்படும் என்றும் திட்ட இயக்குநர் ஈஸ்வர் ரெட்டி கூறினார்.