வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 31 மே 2023 (12:53 IST)

மே 31: இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்!

ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினத்தில் நாம் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுகளை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. 
 
உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு பெரும் காரணமாக இருப்பது புகையிலைதான் என்றும் புகையிலை பயன்படுத்துவதால் புகைப்பவர் மட்டுமின்றி அவருக்கு அருகில் இருப்பவரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
ஒரு சிகரட்டில் உள்ள நிகோடின் என்ற புகையை புகைப்பொருளில் 7000 கெமிக்கல் உள்ளதாகவும் அதை புகைப்பது ரோடு போடும் தாரை குடிப்பதற்கு சமம் என்றும் கூறப்படுகிறது. புகை உங்களை கொலை செய்து விடும் என்று தெரிந்தே ஒரு கத்தியை உங்கள் கையில் வைத்திருக்கிறீகள் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 
 
உலக அளவில் 8 மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் புகையிலை காரணமாக உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 6.5 லட்சத்திற்கும் அதிக அளவான மக்கள் புகைப்பழக்கத்தால் மட்டுமே பலியாகி வருகின்றனர் என்றும் புகையிலை மூலம் உருவாக்கப்படும் சிகரெட், எலக்ட்ரிக் சிகரெட் உள்ளிட்டவை பெரும் தீங்கை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
புகையிலை அதை புகைப்பவர்களை மட்டுமின்றி அவர்களின் வருங்கால சந்ததியினரையும் பாதிக்கும் என்றும் இதனால் புகையை குறைக்க அல்லது நிறுத்த தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆண்டுதோறும் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த விழிப்புணர்வு தினத்திற்காகவே மே 31ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் புகையிலை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி புகையில்லாத தினமாகவும், மே 31ஆம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாகும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 
 
தமிழகத்தில் கூட புகையிலை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்று பல சமூக ஆர்வலர்கள் அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக இன்றைய புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நீண்ட கட்டுரையை பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
புகையிலை பழக்கம் உள்ளவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சினை மட்டுமின்றி மனரீதியாகவும் பிரச்சனை ஏற்படும் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மட்டுமின்றி தற்போது பெண்களும் குழந்தைகளும் கூட புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர் என்பதும் அவர்களை புகையிலை பழக்கத்திலிருந்து மீட்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.  புகையிலை பழக்கத்தை யார் கொண்டிருந்தாலும் உடனே நிறுத்துவதற்கு அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வை அனைத்து அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரும் கோரிக்கையாக உள்ளது.
 
Edited by Mahendran