இந்தியாவுக்கு போக வேண்டாம்?! – உலக நாடுகள் எச்சரிக்கை!

CAA Protest
Prasanth Karthick| Last Modified வியாழன், 19 டிசம்பர் 2019 (18:33 IST)
இந்தியாவில் பல இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வருவதால் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என உலக நாடுகள் பல தங்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள், எதிர் கட்சிகள் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள், பேரணிகள் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடைபெறும் இடங்களில் வன்முறை வெடிப்பதால் நாட்டில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கலவரம் ஏற்படலாம் என கருதப்படும் பதட்டம் நிறைந்த பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா முழுவதும் பல பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இணைய சேவை முடக்கம், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் நிலவி வரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு தங்கள் மக்கள் யாரும் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அந்நாட்டு அரசுகள் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் ஏதேனும் வெளியிட்டுள்ளனவா என்பது குறித்து தெரிய வரவில்லை.இதில் மேலும் படிக்கவும் :