சாவியை தொலைத்த தொழிலாளி துண்டு துண்டாக வெட்டி கொலை

சாவியை தொலைத்த தொழிலாளி துண்டு துண்டாக வெட்டி கொலை


Abimukatheesh| Last Modified வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (18:39 IST)
திருவனந்தபுரம் அருகே வீட்டு சாவியை தொலைத்த தொழிலாளியை, ரப்பர் தோட்ட உரிமையாளர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார்.
 
 


 
திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் பகுதியைச் சேர்ந்த ரவி(55) என்பவர் தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்பவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மாயமாகி உள்ளார். 
 
எதிராஜ மணிகண்டன் என்பவரின் ரப்பர் தோட்டத்தின் அருகில் உள்ள கிணற்றில் பிணம் ஒன்று இருப்பதை ஊர் மக்கள் கணடறிந்துள்ளனர். இது காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
காவல் துறையினர் அந்த கிணறு மணிகண்டனின் தோட்டத்துக்கு அருகில் இருந்ததால், மணிகண்டனை விசாரித்துள்ளனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.
 
அதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் கொலை செய்ததையும், கொலை செய்யப்பட்டவர் ரவி என்பதையும் தெரிவித்துள்ளார்.
 
மணிகண்டன் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். அவருக்கு கிளிமானூரில் ரப்பர் தோட்டமும் பண்ணை வீடும் உள்ளது. அதற்காக அடிக்கடி கிளிமானூருக்கு வந்து செல்வது வழக்கம். அந்த பண்ணை வீட்டிற்கான சாவியை ரவியிடம் கொடுத்து வைத்திருந்தார்.
 
2 சாவிகளையும் ரவியிடம் கொடுத்துள்ளார். ரவி அந்த இரண்டு சாவிகளையும் இரண்டு முறை தொலைத்துள்ளார். ரவியிடம் கொடுக்கப்பட்ட சாவி மீண்டும் தொலைந்ததால் ஆத்திரம் அடைந்து மணிகண்டன், ரவியை கீழே தள்ளியுள்ளார்.
 
அதில் ரவிக்கு தலையில் அடிப்பட்டு இறந்துவிட, அதை மறைக்க மணிகண்டன் ரவியை துண்டு துண்டாக வெட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசியுள்ளார்.  
 
இதையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட மணிகண்டனை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :