1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 29 நவம்பர் 2016 (19:03 IST)

டாக்ஸி டிரைவரை போலீசிடம் இருந்து காப்பாற்றிய பெண்

கால் டாக்ஸி டிரைவர் மீது காவல்துறையில் வாடிக்கையாளர் ஒருவர் பொய் புகார் அளித்துள்ளார். இளம் பெண் ஒருவர் அந்த டாக்ஸி டிரைவரை காவல்துறையினரிடம் இருந்து காப்பாற்றிய சம்பவம் ஃபேஸ்புக்கில் பதிவாக பிரபலம் அடைந்து வருகிறது.


 

 
மும்பையைச் சேர்ந்த ஹிமானி என்ற இளம்பெண் உபர் கால் டாக்ஸி ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு எல்லோராலும் லைக் செய்து, சுமார் 6,300 பேர் ஷேர் செய்யப்பட்டு பிரபலம் அடைந்துள்ளது.
 
அந்த பதிவில் அவர் எழுதியதாவது:-
 
சமீபத்தில் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு செல்ல உபர் டாக்ஸியை புக் செய்து இருந்தேன். என்னுடன் 30 வயதை நெருங்கிய பெண் ஒருவரும் பயணித்தார். டிரைவர் மிகவும் பணிவுடன் நடந்து கொண்டார். அந்த பெண் டிரைவரிடம் மிகவும் மோசமாக நடந்துக்கொண்டார்.
 
அதோடு அவரை தகாத வார்த்தைகள் கொண்டு திட்டினார். நாம் எவ்வளவோ சமாதானப்படுத்தி பார்த்தேன், என்னால் முடியவில்லை. அந்த பெண் டிரைவர்ரிடம், வண்டியை காவல் நிலையத்துக்கு விட சொன்னார். டிரைவர் என்னை வேறொரு கார் பிடித்து வீட்டுக்கு போக சொன்னார். இவருக்கு வாக்குவாதம் முற்றிபோனது. 
 
அதற்குள் அங்கு 20க்கும் மேற்பட்டோர் கூடிவிட்டனர். அவசர போலீசுக்கும் தகவல் சென்றுவிட்டது. பெண் போலீஸ் ஒருவர் அந்த இடத்துக்கு வந்தார். நான் அவரிடம் டிரைவர் மீது எந்த தவறும் இல்லை என்று விளக்கி கூறினேன். அதோடு நான் அவருக்கு ஆதரவாக வாக்கும்மூலம் அளிக்கவும் தயாரக உள்ளேன் என்று கூறி, எனது மொபைல் எண்ணை ஆந்த போலீசிடம் கொடுத்தேன்.
 
அவர் என்னை காவல்நிலையத்துக்கு வருமாறு அழைத்தார். டிரைவரின் நிலை கருதி நான் காவல் நிலையத்துக்கும் சென்றேன். அங்கு அந்த பெண் விடுவதாக இல்லை. காவல்துறையினர் அந்த பெண்ணை வெளியே போகச் சென்னார்கள். ஆனால் அந்த பெண் போகவில்லை. 
 
பின்னர் டிரைவரை காவல்துறையினர் ஒர் அறைக்கு அழைத்துச் சென்றனர். அடிக்கும் சத்தம் கேட்டது. நான் உடனே ஓடிப்போய் பார்த்தேன். அங்கு அவர்கள் பெல்டை தரையில் அடிக்க, டிரைவர் வலிப்பது போல் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார்.
 
அதன்பின்னரே அந்த பெண் காவல்நிலையத்தை விட்டு வெளியேறினார். இதனால் அந்த மும்பை காவல்துறையினருக்கு நன்றி என்று இவ்வாறு எழுதியிருந்தார்.