1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 21 ஜூலை 2016 (15:47 IST)

சுவர் ஏற முடியாமல் திணறிய ஆண் காவலர்; உதவி செய்த பெண் காவலர்

மத்திய பிரதேச மாநிலத்தில் குற்றவாளிகளை பிடிக்க சென்ற போது, சுவர் ஏற முடியாமல் தவித்த ஆண் காவலருக்கு பெண் சப்-இன்ஸ்பெக்டர் உதவி செய்தார்.


 

 
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராதிகா பகத், அவருடன் பணியாற்றும் சக காவல் துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். 
 
ஆனால் அங்கு குடோனின் நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டு இருந்தது. அதனால் குடோனை சுற்றி இருந்த உயரமான மதில் சுவர் மீது ஏறி ராதிகா உள்ளே செல்ல முயன்றார். அவரை பின் தொடர்ந்து வந்த ஆண் காவலர் ஒருவர் சுவர் மீது ஏற முயன்றார்.
 
ஆனால் பலமுறை முயற்சி செய்தும் ஏற முடியவில்லை. இதை கண்ட ராதிகா கைகொடுத்து அந்த காவலருக்கு உதவிசெய்தார்.  பின் குடோனில் நுழைந்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சுமார் 70 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.