1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: புதன், 20 ஜூலை 2016 (19:55 IST)

நடிகர் மம்மூட்டிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

நடிகர் மம்மூட்டிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


 


மம்மூட்டி  நடித்து அண்மையில் வெளியான கசபா திரைப்படத்தில், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் மம்மூட்டியின் வசனம் இடம்பெற்றிருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக போராட்டங்கள் நடைபெற்றுவரும் சூழலில், படத்தைப் பார்த்த கேரள மகளிர் ஆணைய உறுப்பினர்கள், விளக்கம் கேட்டு மம்மூட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர். படத்தை முறையாக தணிக்கை செய்யாதது குறித்து சென்சார் போர்டுக்கும் பெண்களின் கண்ணியத்தை மதிக்குமாறு திரைப்பட அமைப்புகளுக்கும் மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.