1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 17 மே 2016 (13:48 IST)

செல்போனை சோதனையிட்ட கணவரை கத்தியால் குத்திய மனைவி

தன்னுடைய செல்போனை சோதனையிட்ட கணவரை, அவரது மனைவி கத்தியால் குத்திய விவகாரம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பெங்களூரில் வசித்து வருபவர் சந்திரபிராஷ் சிங். இவரின் மனைவி சுனிதா சிங்.
 
கடந்த 4ஆம் தேதி சந்திரபிராஷ் சிங், வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற போது, அவரது மனைவி செல்போனில் மூழ்கியிருந்தார். வீட்டில் சமையல் எதுவும் செய்யவில்லை. இதனால் கோபமடைந்த சந்திரபிராஷ், சுனிதாவிடம் சண்டை போட்டுள்ளார்.  மேலும், அவரின் செல்போனையும் சோதனை செய்துள்ளார். அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. 
 
இதில் கோபமடைந்த சுனிதா, கத்தியை எடுத்து, தனது கணவனின் கையில் குத்தியுள்ளார். இதனால் சந்திரபிராஷின் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ள அவர், தன்னுடைய மனைவி சுனிதா செல்போனுக்கு அடிமையாக இருப்பதாகவும், வீட்டில் வேலை செய்யாமல் எப்போதும் செல்போனிலேயே முழ்கியிருப்பதாகவும், மேலும் அவரிடம் இருந்த தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக, தம்பதியின் பெற்றோர்களை வரவழைத்த போலீசார், அவர்கள் மூலம், இருவருக்கும் அறிவுரை வழங்கி, சமாதனப்படுத்தம் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.