1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (07:00 IST)

இறப்பை பதிவு செய்ய ஆதார் கட்டாயம் ஏன்? புரிந்து கொள்ளுங்கள்

சமீபத்தில் இறப்பை பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு பல எதிர்ப்புகளும், கிண்டலுடன் கூடிய மீம்ஸ்களும் வெளிவந்தன. ஆனால் இறப்பை பதிவு செய்யும்போது ஆதார் எண்ணை இணைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பலர் யோசிப்பதில்லை இதோ



 
 
இறப்பை பதிவு செய்ய ஆதார் அவசியம் ஏன்?
 
1. உயிரோட இருப்பவரை செத்ததா சொல்லி சொத்துகளை அபகரிக்க முடியாது..
 
2. அரசு வழங்கும் முதியோர் உதவி தொகை யை இறந்தவர் கைநாட்டு வச்சு களவாட முடியாது..
 
3. போலி வாக்காளர்கள் இறந்தவர்கள் பெயரில் வந்து ஓட்டு போட முடியாது
 
4. மக்கள் தொகை கணக்கெடுப்பு துல்லியமாகும்..
 
5. அதிக இறப்பு விகிதம் இருக்கும் பகுதிகளில் அரசு தனி கவனம் செலுத்த முடியும்
 
மேற்கண்ட பலன்கள் இருப்பதால் இறப்பை பதிவு செய்யும்போது ஆதார் எண்ணை இணைக்கும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது