1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 2 ஜூன் 2019 (10:53 IST)

புதுச்சேரியின் புது சபாநாயகர் யார்?

புதுச்சேரி சபாநாயகராக யாரை தேர்வு செய்வது என எம்எல்ஏக்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாகிவிட்ட நிலையில் தற்போது புதுச்சேரியில் சபாநாயகர் பதவி காலியாக உள்ளது. இந்த நிலையில் சபாநாயகர் பதவிக்கு வரும் 3ஆம் தேதி அதாவது நாளை தேர்தல் நடத்தப்படும் என புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் சமீபத்தில் அறிவித்து இருந்தார். 
 
இந்த நிலையில் சபாநாயகர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைவதால் முதல்வர் நாராயணசாமி தனது ஆதரவாளர்களுடன் புதிய சபாநாயகர் வேட்பாளர் தேர்வுக்காக தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார். துணை சபாநாயகராக உள்ள சிவக்கொழுந்து சபாநாயகராக தேர்வாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் போதுமான கால அவகாசம் அளிக்காமல் குறுகிய காலத்தில் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சபாநாயகர் தேர்தலை ஒரு வார காலத்திற்கு பின்னர் நடத்த வேண்டும் என பாஜக மற்றும் என்.ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் துணைநிலை ஆளுநடம் மனு அளித்தனர். எனவே சபாநாயகர் தேர்தல் தள்ளிப்போகுமா? அல்லது திட்டமிட்டபடி நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்