வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (12:19 IST)

இந்தியாவில் ஜிகா வைரஸ் பரவும் அபாயம் ? சுகாதாரத் துறை விளக்கம்

ஜிகா வைரஸ் தொடர்பாக உலகளாவிய அவசர நிலையை ஐநா சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் ஜிகா வைரஸ் தாக்கம் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.


 
 
உலகையே அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பிரேசிலில் பரவ தொடங்கிய இந்த வைரஸ் தற்போது மத்திய அமெரிக்கா உள்ளிட்ட 23 நாடுகளில் தாக்கி உள்ளது.

ஏடிஸ் வகை கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ், பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வைரஸ் தாக்கினால் அதை கண்டறிவது கடினம் என்றும், அவ்வாறு வைரஸ் தாக்கப்பட்டு பிறக்கக்கூடிய குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியும் பிறவிக் குறைபாடுடனும் பிறக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.  இதனால், உலகளாவிய அவசர நிலையை ஐநா சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் ஜிகா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக ஐ,நா எச்சரித்தது. இதனால், உடனடியாக நேற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையில் உயர் நிலைக் கூட்டம் நடைபெற்றது அப்போது, இந்தியாவில் ஜிகா வைரஸ் தாக்குதல் இல்லை என்று  மத்திய சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 
ஜிகா வைரஸ் தொடர்பாக ஐநா சுகாதார அமைப்பு அவசர கூட்டம் கூட்டியிருந்த நிலையில், இந்தியா சார்பில் ஜிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து முழு அறிவிக்கை அடுத்த 48 மணி நேரத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.