1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 26 மே 2021 (18:45 IST)

வாட்ஸ் அப் விவகாரம்: தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கருத்து!

சமூக வலைதளங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய விதிகள் தனிமனித உரிமையை மீறுவதாகும் என வாட்ஸ்அப் டெல்லி ஐகோர்ட்டில் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் கருத்துக் கூறியுள்ளது
 
தனிமனித உரிமைக்கு மதிப்பளிப்பது தங்களின் நோக்கம் என்றும் அதே நேரத்தில் குற்றத்தை கட்டுப்படுத்த புதிய வழிபாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதை வாட்ஸ்அப் பின்பற்ற மறுப்பதாகவும் தெரிவித்துள்ளது
 
மேலும் தனி மனித உரிமை குறித்து பேசும் வாட்ஸ்அப் தங்களது அனைத்து தரவுகளையும் தாய் நிறுவனமான பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு வருகிறது என்றும் மத்திய தகவல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 
 
பாலியல் ரீதியான குற்றங்கள் தடுப்பதற்கு கண்டிப்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் சமூக வலைதளங்களுக்கு தேவைப்படுவதாக மத்திய தகவல் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது/ ஏற்கனவே பல சமூக வலைதளங்கள் மத்திய அரசின் புதிய கொள்கையை ஏற்றுக்கொண்ட நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது