1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (20:04 IST)

இந்தியாவிற்குள் ஊடுருவியவர்கள் நிலைமை என்ன ? அமைச்சர் அமித் ஷா அதிரடி

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய மக்கள், 2024 ஆம் ஆண்டுக்குள்  தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் பயன்படுத்தி வெளியேற்றப்படுவார்கள் என பாஜக தேசிய தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 
சமீபத்தில், அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமுல்படுத்தப்பட்டது. இதில் பல லட்சம் மக்கள் பெயர் விடுபட்டதாக புகார் எழுந்தது.
 
இந்நிலையில், ஜார்ஜண்ட் மாநிலத்தில் வரும் சட்டசபைத் தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா, வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் தேசிய குடிமக்கள் பதிவேடு பயன்படுத்துவதன் மூகம் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.