1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 ஜனவரி 2022 (15:58 IST)

மேற்கு வங்கத்தில் கொரோனா; பள்ளி, கல்லூரிகள் மூடல்! – கடும் கட்டுப்பாடுகள்!

இந்தியா முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் கொரோனா காரணமாக மேற்கு வங்கத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களில் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன. முந்தைய டெல்டா கொரோனாவுடன் ஒமிக்ரானும் இணைந்து பரவி வருவதால் பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

மேற்கு வங்கத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளை முழுவதுமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அழகு நிலையங்கள், சலூன், பூங்காக்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும்  தனியார் நிறுவனங்களும் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படவும், அத்தியாவாசிய சேவைகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.