மேற்கு வங்கத்தில் கொடூரம்: பள்ளி வளாகத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம்

Mahalakshmi| Last Modified ஞாயிறு, 15 மார்ச் 2015 (11:25 IST)
72 வயதாகும் கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து நாடுகளும் பெண்கள் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தாலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தினமும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு ஒரு சான்றுதான் மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி ஒருவரை மர்ம கும்பல் பள்ளி வளாகத்திலேயே கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம்.

மேலும் பள்ளியிலிருந்த பணம், மடிக்கணினி போன்ற சாதனங்களையும் மர்ம கும்பல் கொள்ளையடித்துள்ளது. இதில் காயமடைந்த கன்னியாஸ்திரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் பதிவாகியிருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :