செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 9 ஜூலை 2022 (09:44 IST)

வாக்காளர் அட்டை-ஆதார் ஆக.1 முதல் இணைப்பு

voter id aadhar
வாக்காளர் அட்டை-ஆதார் ஆக.1 முதல் இணைப்பு
வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள் நேற்று இது குறித்து ஆலோசனை நடத்தி வாக்காளர். அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க அனுமதி வழங்கியுள்ளார் 
 
தாமாக முன்வந்து ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வசதியாக 6பி என்ற படிவம் வழங்கப்பட உள்ளது என்றும் இந்த படிவத்தை பூர்த்தி செய்து தேர்தல் கமிஷன் இணையதளத்தில் ஆன்லைன் வழியாக ஆதார்-வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்