விஷன்-2050 தொலை நோக்குத் திட்டத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்


K.N.Vadivel| Last Updated: வெள்ளி, 24 ஜூலை 2015 (04:41 IST)
விவசாயிகளுக்கான "விஷன்-2050 என்ற தொலை நோக்குத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 25ஆம் தேதி வெளியிடுகிறார்.

 

இது குறித்து, பாட்னாவில், மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
பிகார் மாநிலம், பாட்னாவில் இந்தியவேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் நிறுவன நாள், ஜூலை  25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வேளாண் ஆராய்ச்சியில் பிகார்மாநிலம் முக்கிய இடத்தை பெற்றிருப்பதால், பாட்னாவில் "இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவன நாள்' கொண்டாடப்பட உள்ளது.
 
இந்த விழாவில், விவசாய துறையின் எதிர்கால சவால்களை எதிர் கொள்வதற்காக, வேளாண் விஞ்ஞானிகள் தயாரித்துள்ள "விஷன்-2050' தொலை நோக்குத் திட்டத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். இதுதவிர, விவசாயிகளுக்கான 3 புதிய திட்டங்களையும் அவர் தொடக்கிவைக்கிறார்.
 
இந்த விழாவில், விவசாயம்சார்ந்த கட்டுரைகளை எழுதிய பத்திரிகையாளர்கள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் உள்ளிட்ட 82 பேருக்கு விருதுகளை வழங்கி நரேந்திர மோடி கௌரவிப்பார் என்றார். 
 


இதில் மேலும் படிக்கவும் :