திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

கொரோனாவால் உயிருக்கு போராடும் மருத்துவர்: ரூ.20 லட்சம் நிதி திரட்டிய கிராம மக்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிருக்கு போராடி வரும் மருத்துவர் ஒருவரை காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் 20 லட்ச ரூபாய் திரட்டி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள கரஞ்சேடு என்ற பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் அவர் மிகுந்த அன்புடன் சேவை செய்தார் என்பதும் ஏழை எளியவர்களுக்கு பணமே வாங்காமல் மருத்துவ சேவை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் தங்களுக்காக சேவை செய்த மருத்துவரை காப்பாற்றுவதற்காக தற்போது கிராம மக்கள் நிதி திரட்டி வருகின்றனர். இதுவரை ரூபாய் 20 லட்சம் நிதி திரட்டி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
கிராம மக்களின் முயற்சி குறித்து அறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் மருத்துவரின் சிகிச்சைக்கு தேவையான ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பணத்தை அரசின் மூலம் நிதி ஒதுக்குவதாக அறிவிப்புச் செய்துள்ளார். இந்த அறிவிப்பு கரஞ்சேடு கிராம மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. தங்களுக்கு சேவை செய்த மருத்துவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று கிராம மக்கள் போராடி வருகின்றனர்