ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 18 ஆகஸ்ட் 2018 (20:35 IST)

வெள்ளத்தில் காணாமல் போன கிராமம்: கர்நாடகாவில் சோகம்!

தென்மேற்கு பருவமழை கேரள, கர்நாடக மாநிலங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மக்கள் பலர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் தங்களது வாழ்வாதார நிலை அறியாமல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நமது அனைவரின் கவனமும் கேரள மீதுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஒரு கிராமமே அடித்து செல்லப்பட்ட அவலம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக குடகு மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளும் போக்குவரத்து இயக்கமின்றி காணப்படுகிறது. 
 
இந்நிலையில் குடகு மாவட்டம், மடிகேரி தாலுக்காவில் காண்டானாகொள்ளி என்ற கிராமமே நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளது. 
 
இந்த கிராமம் இருந்ததற்கான ஒரு சிறு தடயம் கூட இல்லாமல் மொத்தமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.