1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2016 (19:52 IST)

விஜய் மல்லையா அறிவிக்கப்பட்ட குற்றவாளி : நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

ஏராளமான வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்துள்ள, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.


 

 
விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, திருப்பி தராமல் மோசடி செய்தார். மேலும் லண்டனுக்கு தப்பிச் சென்று அங்கேயே தங்கியுள்ளார். தன் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளையும் அவர் சந்திக்க மறுத்து விட்டார்.
 
இதனால் அவர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் போன்றவை வழக்குப்பதிவு செய்துள்ளன. அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பல்வேறு பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவரை இந்தியாவிற்கு அனுப்ப இங்கிலாந்து அரசும் ஏற்க மறுத்துவிட்டது. 
 
சமீபத்தில், இந்தியாவில் உள்ள அவரின் ரூ.1411 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாகக்த்துறை முடக்கியது. இந்நிலையில், பண மோசடி விவகாரத்தில் மத்திய அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, விஜய் மல்லையாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று பணமோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.