ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (12:50 IST)

மோசடி மன்னன் விஜய் மல்லையா - வெளிநாட்டில் குதுகல வாழ்க்கை

பண மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டிற்கு தப்பியோடியுள்ள விஜய் மல்லையா அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கடன் வாங்கிய விஜய் மல்லையா அதை திருப்பு செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார்.  அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த சிபிஐ தரப்பில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் விரைவில் இந்தியா நாடு கடத்தப்படுவார் என மத்திய அரசு கூறி வருகிறது.
இதற்கிடையே மோசடி மன்னன், விஜய் மல்லையா இங்கிலாந்தில் குதூகல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அங்கு அவரது தோழியுடன் வசித்து வருகிறார்.  அங்கு தங்கத்தால் ஆன டாய்லட் பேசனை விஜய் மல்லையா பயன்படுத்தி வருகிறார்.
இந்திய மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து சென்ற மல்லையாவை கைது செய்யாமல் இப்படி சொகுசு வாழ்க்கையை வாழ வைக்கும் அரசை மக்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.