வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (12:08 IST)

அரசு அலுவலகங்களில் Hello-க்கு பதில் இனி வந்தே மாதரம்!

அரசு அதிகாரிகள் ஹலோ என கூறுவதற்கு பதிலாக, ‘வந்தே மாதரம் ' என்று சொல்ல வேண்டும்.


இந்தியாவில் இன்று 76 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார்.

நாட்டின் 76வது சுதந்திர தினத்தை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் என்பதும் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில கலாச்சார அமைச்சர் சுதிர் முங்கந்திவார், மாநில அரசு அதிகாரிகள் அலுவலகங்களில் தொலைபேசி அழைப்புகளைப் வரும்போது ஹலோ என கூறுவதற்கு பதிலாக, ‘வந்தே மாதரம் ' என்று சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் 76 வது ஆண்டில் நுழைகிறோம். நாட்டின் சுதந்திர அமுதவிழாக் கொண்டாட்டத்தில் இருக்கிறோம். எனவே, அதிகாரிகள் ஹலோ என்பதற்கு பதிலாக தொலைபேசியில் வந்தே மாதரம் என்று சொல்லிப் பழக வேண்டும் என்று கூறினார்.