வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 நவம்பர் 2023 (10:41 IST)

இந்திய இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு கோவிட் தடுப்பூசி காரணமா? ஐசிஎம்ஆர் விளக்கம்

Vaccine
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய இளைஞர்கள் மாரடைப்பு உட்பட ஒரு சில காரணங்களால் மரணம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக ஜிம்மில் அதிக அளவு ஒர்க் அவுட் செய்பவர்கள் மாரடைப்பு காரணமாக இறந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து  ஐசிஎம்ஆர் ஆய்வு செய்து விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் இளைஞர்கள் திடீர் மரணம் அடைய கோவிட் தடுப்பூசி காரணம் என்று கூறுவது சரியல்ல என்றும் கொரோனா சிகிச்சை, குடும்பங்களில் உள்ள நோய், வாழ்க்கை முறை மாற்றங்களால் இளைஞர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.  

கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை உயிரிழந்த 18 முதல் 45 வயதினர்களை ஆய்வு செய்த பின்னர் அறிந்து முடிவு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

கோவிட் தடுப்பூசி காரணமாகத்தான் இளைஞர்களுக்கு மாரடைப்பு நோய் வருகிறது என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் இந்த தகவலை ஐசிஎம்ஆர் மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran