1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 மே 2022 (13:43 IST)

பேரக்குழந்தை இல்லாவிட்டால் 5 கோடி! – வித்தியாச வழக்கு தொடர்ந்த தம்பதி!

Uttarkhand
உத்தரகாண்டில் தனது மகன் திருமணமாகியும் பேரக்குழந்தை பெற்று தராமல் இருப்பதாக பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வபோது நாட்டில் பல்வேறு விஷயங்களுக்காக மக்கள் நீதிமன்றங்களை நாடும் நிலையில் சில சம்பவங்கள் சுமாரானதாக தெரிந்தாலும் பெரும் வைரலாகி விடுகிறது. அப்படியான ஒரு சம்பவம் உத்தரகாண்டில் நடந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் பிரசாத். இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு அவரது பெற்றோர் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். நிறைய செலவு செய்து திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சஞ்சீவ் தம்பதியினருக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்து சஞ்சீவின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் தாங்கள் தங்கள் மகனுக்கு நிறைய செலவு செய்து திருமணம் செய்து வைத்ததாகவும், ஆனால் இன்னும் பேரக்குழந்தை பெற்று தராமல் அவர் ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் அடுத்த ஒரு வருடத்திற்குள் பேரக்குழந்தை பெற்று தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.