திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 மார்ச் 2021 (12:43 IST)

Veg பீட்ஸாவுக்கு பதில் டெலிவரியான Non Veg பீட்ஸா! – ஒரு கோடி நஷ்டஈடு கேட்கும் பெண்!

உத்தர பிரதேசத்தில் அசைவ பீட்ஸாவை டெலிவரி செய்த நிறுவனத்திடம் பெண் ஒருவர் ஒரு கோடி நஷ்ட ஈடு கோரியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் நாள்தோறும் உணவு டெலிவரி செயலிகள் மூலம் பல உணவகங்கள் பல்லாயிரம் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்து வருகின்றன. இந்நிலையில் சிலசமயங்களில் தவறுதலாக வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவிற்கு பதிலாக வேறு சில உணவுகள் டெலிவரி செய்யப்படும் குழப்பங்களும் நடந்து விடுகின்றன. இதுபோன்ற தவறுதலான டெலிவரிக்கு உணவு டெலிவரி செயலிகளே பணத்தை திரும்ப தந்து விடுகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். அவர் சைவ உணவை சாப்பிடுபவர் என்பதால் சைவ பீட்சா ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு தவறுதலாக அசைவ பீட்ஸா டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இது தெரியாமல் அதை சாப்பிட்ட அவர் அசைவம் என தெரிந்ததும் இதுகுறித்து வழக்கு தொடர்ந்து ரூ.1 கோடி நஷ்டஈடு கோரியுள்ளார்.

அசைவம் சாப்பிட்டு விட்டதால் அதற்கு பரிகாரம் செய்ய பல லட்சங்கள் செலவாகும் என்பதால் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.