வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2015 (10:13 IST)

உத்தர பிரதேசத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: 36 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில், சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
 
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி, அமேதி பகுதிகளில் நேற்று திடீரென்று பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
 
உத்தர பிரதேசத்தில், கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென்று காற்றுடன் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது.
 
இடியுடன் கூடிய கனமழை காரணமாக, ரேபரேலி அருகே உள்ள புர்வா கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். அமேதியை அடுத்த முன்ஷிகஞ்ச் என்ற கிராமத்தில் வீடு இடிந்து 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
 
கஸ்கஞ்ச் பகுதியில் பல்வேறு இடங்களில் வீடு இடிந்து 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பல இடங்களில் ஏற்பட்ட சேதத்தில் மொத்தம் 36 பேர் இறந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
 
இந்த கன மழையால், பல இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. சாலைகள் சேதம் அடைந்ததால் வாகன போக்குவரத்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
 
இந்நிலையில், மின்சார கம்பிகள் அறுந்து விழுந்ததில் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்துகளும் 5 மணி நேரம் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.