வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 5 மே 2015 (14:30 IST)

சிறுநீர் ஊற்றியே செடியை வளர்த்தேன்: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

நாக்பூரில் நடைபெற்ற நீர்ப்பாசன முறைகள் பற்றிய கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார். இந்தியாவில் உள்ள சாலைகள் குறித்தும், நீர் பாசனம் குறித்து அவர் பேசுவார் என அதிகாரிகளும், கூட்டத்திற்கு வந்தவர்களும் காத்து இருந்தனர். ஆனால், பலரும் எதிர்பாரத வகையில், பேசி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.


 

 
கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பேசியதாவது:-
 
தற்போது நான், டெல்லியில் மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வருகிறேன். இந்த பங்களாவை முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பயன்படுத்தி வந்தார். இந்த பங்களாவில் சுமார் 1 ஏக்கர் அளவுக்கு விதவிமான மரங்கள், செடிகள், கொடிகள் என அழகிய தோட்டமாக உள்ளது.
 
இந்த தோட்டத்து செடிகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என விரும்பினேன். அது பற்றி ரொம்பவே சித்தித்தேன். பின்பு ஒரு முடிவுக்கு வந்தேன்.
 
அது என்ன வென்றால், நமது சிறுநீரை அந்த செடிகளுக்கு ஊற்றி வளர்த்துவது என முடிவு செய்தேன். முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனாலும் நான் எனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அதை செயல்படுத்துவதில் உறுதியாக நின்றேன்.
 
இதனால், அன்று முதல் நான் எனது சிறுநீரை பிளாஸ்டிக் கேனில் பிடித்து சேகரித்தேன். அது 50 லிட்டராக சேர்ந்ததும், என் வீட்டு தோட்டக்காரரை அழைத்து அதை, தண்ணீரில் கலந்து, குறிப்பிட்ட இடத்தில் உள்ள செடிகளுக்கு ஊற்றுமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் அது போலவே தினமும் செய்தார்.
 
சில நாட்களேயே செடிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் நன்றாக தெரிந்தது. தண்ணீர் ஊற்றி வளர்க்கப்பட்ட மற்ற செடிகளை விட, எனது சிறுநீர் ஊற்றி வளர்க்கப்பட்ட செடிகள்தான் மிகவும் நன்றாக வளர்ந்திருந்தது.
 
நமது சிறுநீரில் யூரியாவும், நைட்ரஜனும், அதிகமாக உள்ளது. எனவே, இதை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். நீங்களும் உங்களது வீட்டு தோட்டத்தில் இதை முயற்சி செய்து பாருங்கள். நான் சொல்வதை தயவு செய்து யாரும் தவறாக புரிந்த கொள்ளாதீர்கள் என்ற வேண்டுகோளுடன் முடித்தார். 
 
அந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்  நிதின் கட்கரியின் பேச்சை கேட்டவர்கள் ஒரு கனம் கடும் அதிர்ச்சி அடைந்து, சகஜ நிலைக்கு மீண்டுவர சிறிது நேரம் ஆனதாம்.
 
பிறகு ஒருவாறு சமாளித்து, எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும் சாமி..... என கூறியவாறே பலரும் கலைந்து சொன்றார்களாம்.