பிரிட்டனிலிருந்து 1200 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்! – இன்று இந்தியா வந்தது!
பிரிட்டனிலிருந்து இந்தியாவின் ஆக்ஸிஜன் தேவைக்காக அனுப்பப்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இன்று இந்தியா வந்தடைந்தது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரித்துள்ளனர். தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில் உலக நாடுகள் பல இந்தியாவிற்கு ஆக்ஸிஜன் மற்றும் மருந்து பொருட்களை அனுப்பி வருகின்றன. அந்த வகையில் பிரிட்டனில் உள்ள ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவிற்காக 1200 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அனுப்பியுள்ளது. கத்தார் ஏர்லைன்ஸின் சரக்கு விமானம் மூலமாக இந்தியா வந்த இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆக்ஸிஜன் தேவை உள்ள மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.