திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 15 மே 2018 (18:29 IST)

மின்னணு இயந்திரத்துக்கு பதிலாக வாக்கு சீட்டு; பாஜகவிற்கு உத்தவ் சிவசேனா சவால்!

கர்நாடக தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜகவிற்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார்.

 
நடந்து முடிந்த கர்நாடக தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அதில் பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் 78 தொகுதிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 
 
பாஜக வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது அனைவரிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பாஜக வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது வருகிறது.
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையிலும் பாஜக முன்னிலை வகித்ததை தொடர்ந்து சிசசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாஜகவிற்கு சவால் விடுத்துள்ளார்.
 
அதாவது, ஒரு தடவை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்கு சீட்டுக்களை பயன்படுத்தி தேர்தலை நடத்துங்கள் பார்க்கலாம் என்று சவால் விடுத்துள்ளார்.