வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bala
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2016 (17:59 IST)

படுக்கைக்கு அழைத்த உதவி இயக்குனருக்கு பளார் விட்ட நடிகை- வீடியோ

தனக்கு முத்தம் கொடுத்த உதவி இயக்குனரை பளார் விட்ட நடிகையால் பரபரப்பு ஏற்பட்டது.



மும்பை தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமானவர் நடிகை அமன் சந்த்( வயது 27). பல தொடர்களில் நடித்து வரும் இவரை திரைப்பட உதவி இயக்குனர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அப்போது தான் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க வைக்க விரும்புவதாகவும், அதனால்  நேரில் சந்திக்குமாறும் கூறியுள்ளார்.

இதையடுத்து நடிகை அமன் சந்த் உதவி இயக்குனர் தீபக்மிஸ்ராவை காப்பி ஷாப் ஒன்றில் சந்தித்து பேசினார். அப்போது தீபக் மிஸ்ரா நடிகை அமன் சந்திடம், நாங்கள் இயக்கும் அடுத்தப்படத்தில் உங்களுக்கு வாய்ப்பு வழங்குவதாகவும், அதற்காக நீங்கள் என்னுடனும், இயக்குனருடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ளவேண்டும் என கூறியதாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி திடீரென அமன்சந்துக்கு முத்தம் கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அமன் சந்த், தீபக்மிஸ்ராவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு: