வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bala
Last Modified: சனி, 21 நவம்பர் 2015 (13:59 IST)

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற தமிழக இளைஞர்களை நாடு கடத்திய துருக்கி அரசு: பரபரப்பு தகவல்கள்

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த  2 பேரை துருக்கி அரசு  நாடு கடத்தியதாக கூறப்படுகிறது.


 

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 23 வயது வாலிபரும், கரூரை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவரும் ராயப்பேட்டை ஐஸ் அவுஸ்சில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தனர்.

அவர்கள் 2 பேரும் கடந்த 10 நாட்களுக்கும் முன்னர் தங்கள் பெற்றோரிடம் சென்னையில் வேலை பிடிக்கவில்லை என்றும், பெங்களூருக்கு செல்வத்காகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் தற்போது துருக்கி நாட்டிற்கு சென்று அங்கிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் பகுதிக்கு சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காகவே அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் துருக்கி சென்ற இரு இளைஞர்களையும் அந்நாடு திருப்பி அனுப்பியது. இதுதொடர்பான தகவல்களை மத்திய உளவுத்துறை சென்னை போலீசுக்கு அனுப்பியுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து பெங்களூரு வந்தடைந்த அவர்களை ரகசிய இடத்தில் வைத்து உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.