திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (08:55 IST)

மேற்கு வங்கத்தில் மம்தா முன்னிலை… சிறிய இடைவெளியில் பாஜக!

மேற்கு வங்க தேர்தல்  வாக்கு எண்ணிக்கையில் மம்தா பானர்ஜியின் திருணாமூல் காங்கிரஸ் 53 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. ஆட்சியைக் கைப்பற்ற அங்கு 147 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும். இந்நிலையில் சற்று முன்னர் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் திரிணாமூல் காங்கிரஸ் 53 தொகுதிகளிலும், பாஜக 51 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதனால் அங்கு கடைசி வரை போட்டி நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.