1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 30 நவம்பர் 2023 (14:15 IST)

பணி நேரம் முடிந்தது.. நடுவழியில் ரயிலை நிறுத்திவிட்ட சென்ற ஓட்டுனர்கள்: 2500 பயணிகள் அவதி

Train
தங்களது பணி நேரம் முடிந்தது என்று கூறி நடுவழியில் ரயிலை நிறுத்திவிட்டு ஓட்டுநர்கள் இறங்கி சென்றதை அடுத்து 2500 பயணிகள் அவதிப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
உத்தர பிரதேசம் மாநிலத்தில்  விரைவில் ஒன்றின் ஓட்டுனர் திடீரென தனது பணி நேரம் முடிந்து விட்டதாக கூறி இறங்கி சென்றுவிட்டார். மற்றொரு ஓட்டுனரின் உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. 
 
இதனால் நடுவழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் குடிநீர், உணவு, மின்சாரம் இன்றி சுமார் 2,500 பயணிகள் அவதிக்கு உள்ளாகினார். இதனை அடுத்து பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து பயணிகளை சமாதானம் செய்த அதிகாரிகள் உடனடியாக மாற்று ஓட்டுனரை ஏற்பாடு செய்து  ரயில் இயக்க வைத்தனர்.  பணி நேரம் முடிந்துவிட்டது என ரயில் ஓட்டுநர் நடுவழியில் ரயில் நிறுத்தி சென்றதால் அந்த வழியாக செல்லும் பல ரயில்கள் தாமதமாக சென்றதாகவும் இதனால் சுமார் 2500 பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
Edited by Siva