உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்ட காதலர்: உயிரை மாய்த்த காதலியின் குடும்பம்
ஹரியானா மாநிலத்தில் ஒரு குடும்பம் தங்கள் மகள், ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியானதால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பெங்களூரில் விடுதியில் தங்கி படித்து வந்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த போது ஒரு ஆணுடன் காதல் வசப்பட்ட கல்லூரிக்கு அடிக்கடி விடுப்பு போட்டு ஊர் சுற்றியுள்ளார்.
சந்தோசமாக காதலித்து வந்த அவர்கள் ஒரு நாள் ஹோட்டலில் ரூம் எடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர். இருவரும் உல்லாசமாக இருந்ததை காதலன் தனது செல்போனில் விடியோ எடுத்திருக்கிறான். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தும், அதனை டெலிட் செய்து விடுவேன் என கூறி வீடியோ எடுத்துள்ளான்.
ஆனால் காதலன், அந்த வீடியோவை புனேவில் உள்ள தனது நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ந்துள்ளான். இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி பரவி உள்ளது. இந்த வீடியோ விவகாரம் அந்த பெண்ணின் அப்பாவுக்கு அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தனது மகளின் உல்லாச வீடியோ இணையத்தில் வெளியானதை பார்த்து விட்டு, மகளை உடனடியாக வீட்டுக்கு அழைத்துள்ளார். அந்த பெண் வீட்டுக்கு வந்த போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்பா, அம்மா, இரண்டு தம்பிகள், அக்கா என குடும்பமே சயனைட் சாப்பிட்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
அவர்கள் எழுதி வைத்த கடிதத்தை படித்த பின்னர் தான் அந்த பெண்ணுக்கு தனது காதலர் துரோகம் செய்தது, தனது உல்லாச வீடியோ இணையத்தில் வந்ததும் தெரியவந்தது. இதனால் மனமுடைந்த அந்த பெண் பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.