1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (09:14 IST)

தக்காளி விலை ஒரு கிலோ 10 ரூபாய்தான்.. ஒரே மாதத்தில் தலைகீழான ஆச்சரியம்..!

கடந்த மாதம் இதே நாளில் தக்காளி விலை ஒரு கிலோ 200 ரூபாய் என விற்பனையான நிலையில் தற்போது தக்காளி விலை மொத்த விலையில் 10 ரூபாய்க்கும் சில்லறை விலையில் 20 ரூபாய்க்கும் விற்பனையாகி வருவதாக தகவல் வெளியானது. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளி விலை விண்ணை தாண்டியது என்பதும் இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைத்தனர் என்பதும் தெரிந்ததே. ஹோட்டல்களில் தக்காளி சட்னி இல்லை என்று போர்டு வைக்கும் அளவுக்கு தக்காளி விலை அதிகரித்தது 
 
ஆனால் கடந்த சில நாட்கள் ஆக படிப்படியாக தக்காளி விலை குறைந்து வந்தது என்பதும், நேற்று முன்தினம் தக்காளி விலை 40 ரூபாய் மற்றும் 50 ரூபாய் என விற்பனையாகி வந்தது. 
 
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதை அடுத்து மொத்த விலையில் 10 ரூபாய்க்கும் சில்லறை விலையில் ரூ. 20 ரூபாய்க்கும் விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே மாதத்தில் தக்காளி விலை தலைகீழானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva