வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 9 செப்டம்பர் 2021 (08:50 IST)

உலக மின்சார வாகன தினம்!

உலக மின்சார வாகன தினம்!
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9ஆம் தேதி உலகம் முழுவதும் உலக மின்சார வாகனங்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது
 
பெட்ரோல் மற்றும் டீசல்களில் தற்போது வாகனங்கள் ஓடிக்கொண்டு இருந்தாலும் அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில் உலகம் முழுவதும் மின்சாரம் வாகனங்கள் மாறிவிடும் என்றும் பெட்ரோல் டீசலின் தேவை இனி இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது
 
மின்சார வாகனங்களின் காலம் தான் உலகின் பொற்காலமாக இருக்கும் என்றும் பெட்ரோல் டீசல் ஏற்படும் பொருளாதார நெருக்கடி இனி அடுத்த பத்தாண்டுகளில் இருக்காது என்றும் கூறப்படுகிறது
 
மின்சார வாகனங்கள் விற்பனை செய்வதன் மூலம் எரிபொருள் இறக்குமதி செலவு இந்தியாவுக்கு சுமார் 3 லட்சம் கோடி மிச்சமாகும் என்றும் வாகனங்களுக்கு பேட்டரி தயாரிப்பு மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தனியார் நிறுவனமொன்று கணித்துள்ளது
 
மேலும் முதலீட்டாளர்களை ஈர்க்கவும் மின்சார வாகனத்திற்கு வரிச்சலுகை அளிக்கவும் மத்திய அரசு முன் வந்திருப்பதால் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் மின்சார வாகனத்தில் பயன்பாடு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது