வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 2 மே 2024 (08:42 IST)

இன்று வெளியாகிறது அமேதி, ரேபேலி தொகுதி வேட்பாளர் பட்டியல்? ராகுல், பிரியங்கா போட்டி?

காங்கிரஸ் கட்சி பெரும்பாலான தொகுதியின் வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில் அமேதி மற்றும் ரேபேலி  ஆகிய இரண்டு தொகுதிகளின் வேட்பாளர்கள் மட்டும் அறிவிக்காமல் இன்னும் சஸ்பென்ஸ் ஆக வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அமேதி,ரேபேலி தொகுதி வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் ரேபேலி நான் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று சோனியா காந்தி விரும்புவதாகவும் இதை எடுத்து இன்று வெளியாகும் வேட்பாளர் பட்டியலில் இந்த இருவரின் பெயர்கள் இருக்கும் என்றும் கூறப்படுவது

ஏற்கனவே கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில் கூடுதலாக அவர் அமேதி தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Edited by Siva