1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. To increase the strength of the army.. additional powers to the commander..! - Central government orders action!

ராணுவ பலத்தை அதிகரிக்க.. தளபதிக்கு கூடுதல் அதிகாரம்..! - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

Army

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்து வரும் நிலையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் எழுந்துள்ள நிலையில் கடந்த 7ம் தேதி இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம் தாக்கி அழிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பாகிஸ்தான் பூன்ச் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியானார்கள்.

 

மேலும் பாகிஸ்தான் 15 இந்திய நகரங்கள் மீது நடத்த முயன்ற தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்தது. போர் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில் ராணுவத்திற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக ராணுவ தளபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் கூடுதல் அதிகாரங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.

 

அதன்படி, ராணுவத்திற்கு பணியாளர்களை சேர்ப்பது, ராணுவ நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்துவது, நாட்டின் பிற பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களை எல்லையில் பயன்படுத்துவது தொடர்பான உத்தரவுகளுக்கு கூடுதல் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
போர் நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? மத்திய அரசு அறிவுரை..!