திருப்பதி அருகே செம்மரம் வெட்டியதாக 6 தமிழர்கள் கைது


Suresh| Last Updated: புதன், 24 பிப்ரவரி 2016 (12:49 IST)
திருப்பதி அருகே செம்மரம் வெட்டியதாகக் கூறி 6 தமிழர்களை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

 
திருப்பதி கரக்கம்பாடி அடுத்த ரிக்ஷா காலனி பகுதியில் 30 க்கும் மேற்பட்டவர்கள் செம்மரங்களை வெட்டச் சென்றதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
 
இதைத் தொடர்ந்து, அங்கு வந்த செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள்  6 பேரை கைது செய்தனர்.
 
இதைத் தொடர்ந்து, பிடிபட்டவர்களிடம் ஆந்திர காவல்துறையினர் தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
கைது செய்யப்பட்டவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா ஊர்கவுண்டர் கிராமத்தை சேர்ந்த ராஜா, வெங்கடேஷ், முருகன், சேகர், கோபால், ஆனந்த் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், அங்கிருந்து தப்பியோடிய மற்றவர்களை செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :