1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 7 ஆகஸ்ட் 2015 (05:46 IST)

திருப்பதி கோவில் உண்டியலில் திருடிய பெங்களூரு நபர் கைது

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் ரூ.13 ஆயிரத்தை திருடிய பெங்களூருவைச்சேர்ந்த பலே ஆசாமியை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கிறார்கள். சுவாமி தரிசனம் முடிந்தவுடன், அருகில் உள்ள வாரி உண்டியலில் பணம், நகைகள் போன்றவற்றைத் தங்களது நேர்திக்கடனாகச் செலுத்துவது வழக்கம்.
 
இந்த நிலையில், சுவாமி தரிசனம் முடிந்த உடன், அருகில் உள்ள உண்டியல் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குச் சென்ற அந்த நபர் அதில் கையைவிட்டுப் பணத்தை எடுத்தார். இந்தக் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் தெரிய வந்தது.
 
இதனையடுத்து, தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகளும், காவல்துறையினரும் அந்த நபரை விரட்டிப்பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் பெங்களுருவைச் சேர்ந்த ரகு என்றும், தான் உண்டியலில் ரூ 13 ஆயிரம் திருடியதை ஒப்புக் கொண்டார்.
 
இதனையடுத்து, அந்த நபரிடருந்த ரூ 13 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி கோவில் நடைபெற்ற இந்தத் திருட்டுச் சம்பவம் பக்தர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.