வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 18 ஜூன் 2015 (00:42 IST)

திருமலையில் ரூ 300 டிக்கட் தரிசன நேரம் அதிகப்படுத்தப்படும்: முதன்மை நிர்வாக அதிகாரி தகவல்

பக்தர்கள் கூட்டத்துக்கு ஏற்ப ரூ.300 கட்டண டிக்கெட்டை அதிக அளவில் வழங்க நடவடிக்கை எடுப்படும் என தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
 

 
திருமலையில் ஏழுமலையான சரிதனம் செய்யும் வந்துள்ள ஆன்மீக அன்பவர்களிடம் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் குறைகறை கேட்டறிந்தார்.
 
பின்பு, திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ரூ.300 டிக்கெட் எடுத்தவர்களுக்கு காலையில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இனி அவர்களுக்கு கூடுதல் நேரம் நீட்டிக்கப்பட்டும். மாலை நேரத்திலும் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி வழங்கப்படும். பக்தர்கள் கூட்டத்துக்கு ஏற்ப ரூ.300 கட்டண டிக்கெட்டை அதிக அளவில் வழங்க நடவடிக்கை எடுப்படும்.
 
ஆன்மீக அன்பர்களின் நலன் கருதி, அலிபிரியில் அவர்களின் உடமைகளை சோதனை செய்யும் இடத்தில் கூடுதல் ஸ்கேனிங் இயந்திரங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை மாறும். மேலும், உண்டியல் எண்ணும் இடங்களில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.