செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (22:00 IST)

ராம பக்தர் அனுமன் பிறந்த இடம் இதுதான் ...திருப்பதி தேவஸ்தான் தகவல்

திருப்பதி திருமலையில் தேவஸ்தானம் சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி மலைத்தொடரில்தான் தீவிர ராமபக்தர் அனுமன் பிறந்தார் என  அதிகாரப்பூர்வமாக திருப்பதி தேவஸ்தான் கூறியுள்ளது.

தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முரளிதர சர்மா தலையிலான குழு , அனுமன் பிறந்த இடம் குறித்த ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆராய்ச்சு சுமார் 4 மாதங்கள் நடைபெற்றது. இதன் முடிவில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  அதில், ராம பக்தரான அனுமன்   திருப்பதி திருமலையில் தேவஸ்தானம் சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி மலைத்தொடரில்தான் பிறந்தார் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் 12, 13 ஆ,ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட புராணங்களில் அஞ்சன்மாத்ரி குறித்து எழுதப்பட்ட குறிப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது